2000 ரன்களை கடந்த நடாலி ஸ்கைவர்... இன்னும் ஒரு விக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒரு நாள் போட்டி நாளை (ஜூன் 30) நடைபெற உள்ளது. முன்னதாக நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ் மட்டுமே சிறப்பாக விளையாடி 72 ரன்கள் அடித்தார்.
இந்தப் போட்டியின் போது இங்கிலாந்து பெண்கள் அணியின் நடாலி ஸ்கைவர் அதிரடியாக விளையாடி 74 பந்துகளில் 74 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்தார் நடாலி ஸ்கைவர். ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 2055 ரன்களை அடித்துள்ளார் நடாலி ஸ்கைவர்.
இதேபோல் பந்துவீச்சில் (ஒரு நாள் போட்டியில்) இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் 50 ஆவது விக்கெட்டை எடுப்பார் நடாலி ஸ்கைவர்.
Nat Sciver not only starred with an unbeaten 74 in England's eight-wicket win in the first #ENGvIND match, but she also completed 2000 runs in ODIs ????
— ICC (@ICC) June 28, 2021
She is just a wicket away from reaching the 50-wickets mark in the format ???? pic.twitter.com/ScrnlbfmMx
