அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி!
மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், ஷெரிப் கேம்பஸ் என்கிற போலீஸ்காரர் உயிரிழந்தார். அந்த மர்மநபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பின்னர், வீட்டில் சோதனை செய்தபோது, ஒரு பெண்னும் அவரது 2 மகன்களும் உயிரிழந்து கிடந்தனர். அது, அந்த நபரின் மேலும், வீட்டிலிருந்த 2 சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அமெரிக்காவில் சமீபகாலமாகத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கலிபோர்னியா மாகாணம் பேக்கர்ஸ் பீல்டில் உள்ள ஒரு வீட்டில் மர்மநபர் ஒருவர், பொதுமக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், பொதுமக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது,, வீட்டின் கூரை மீது ஏறி போலீஸார் உள்ளே நுழைந்தனர். அப்போது, அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், ஷெரிப் கேம்பஸ் என்கிற போலீஸ்காரர் உயிரிழந்தார். அந்த மர்மநபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பின்னர், வீட்டில் சோதனை செய்தபோது, ஒரு பெண்னும் அவரது 2 மகன்களும் உயிரிழந்து கிடந்தனர். அது, அந்த நபரின் மேலும், வீட்டிலிருந்த 2 சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 41 வயது என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டது. அவரது பெயர், உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
