தமிழ்മലയാളംहिंदी
அலசல்
“9 மாச கர்ப்பிணி 10 மணிக்கு மேல போட்டு ஏறி இக்கரைக்கு வந்திருக்கு” மோதிரமலை மக்கள்!
'ஆஸ்பத்திரி கேஸ்னா 108க்குதான் விழிப்போம். 108க்கு வரமுடியல, அதனால போட்டு வழியாதான் கொண்டு போறது' என்கிறார் 3 மாதத்திற்கு முன் குழந்தை பெற்றுக்கொண்ட துளசி
மோதிரமலை!... கன்னியாகுமரி மாவட்டத்தில், கூகுள் மேப்பில் தேடினாலும், இந்த பகுதியை எளிதில் கண்டறிய முடியாது. அப்படிப் பட்ட இடத்தில் 600க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். அத்தோடு, அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் வந்து செல்கிறார்கள். எனினும், ஆற்றைக் கடக்க முறையான பாலம் இல்லாமல் மக்கள் உணவு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதி கிடைக்காமல் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
