குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் வீடியோ வைரலாகி வந்த நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இரு தினங்களாக ஊடகங்களில் வைரலாகும் விவகாரமான, பெற்றதாயே குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் விஷம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று கேட்காதவர்கள் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு காரணத்தை முன்வைப்பர். உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன?
விழுப்புரத்தில் பெற்ற தாயே குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவரது கணவரே இந்த வீடியோக்களை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களில் வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், சில ஊடகங்களும் இதை வெளியிட்டன. எனவே செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தாயார் வீட்டில் தங்கியிருந்த துளசி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

அவரை சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். துளசிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்பட்ட நிலையில், அவரை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடத்தினர். அதில், மன ரீதியிலான கோளாறு எதுவும் இல்லை என்று சான்றளிக்கப்பட்டது.
அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட துளசியிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், இரண்டாவது குழந்தை பிறந்ததால் தன்னுடைய அழகை இழந்ததாகவும், எனவே அடித்துத் துன்புறுத்தி வீடியோ எடுத்து, ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும் துளசி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துளசி மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பிரேம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், கணவர் அவரை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரிடம் விவகாரத்து பெறுவதற்காக, கையொப்பம் பெற்ற கணவர், அத்துடன் தான் வாங்கி கொடுத்த செல்போனை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளார். அந்த செல்போன் மூலமே குழந்தைக்கு நடந்த கொடுமை வெளியுலகிற்கு வந்துள்ளது.

Related Stories
‘உலகின் சிறந்த தாய்’ என்ற விருதை மகளிர் தினத்தன்று வாங்க இருக்கும் ஆண்! எதற்காக இந்த விருது தெரியுமா?
38 ஆண்டுகளுக்கு முன் ரயிலில் விட்டுச் சென்ற தாய்; ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு!
தனக்கு பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்த தாய் - நெஞ்சை உலுக்கிய புகைப்படங்கள்!
குட்டியை விடுவித்த பிறகும், பாம்பை விடாமல் துரத்திய எலி! 'தாய்மையின் தைரியம்'