ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் - டாப் 5 இல் ஒரே இந்தியர்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசாங்னே முதலிடம் பிடித்தார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் டாப் 2 இடங்களைப் பிடித்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
ஜூன் 19 முதல் நேற்று வரை நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றது இந்திய அணி.
The moment New Zealand became World Test Champions! ???? pic.twitter.com/KNmiwENIn7
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 23, 2021
இந்நிலையில் இந்தப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசாங்னே முதலிடம் பிடித்தார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 1675 ரன்களை அடித்துள்ளார் மார்னஸ் லபுசாங்னே. இதில் 5 சதங்களும், 9 அரை சதங்களும் அடங்கும்.
இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரஹானே 1159 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 3 சதங்கள், 6 அரை சதங்களுடன் 1159 ரன்களை அடித்துள்ளார் ரஹானே.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள்
1) மார்னஸ் லபுசாங்னே - 1675 ரன்கள்
2) ஜோ ரூட் - 1660 ரன்கள்
3) ஸ்டீவ் ஸ்மித் - 1341 ரன்கள்
4) பென் ஸ்டோக்ஸ் - 1334 ரன்கள்
5) ரஹானே - 1159 ரன்கள்
