தமிழ்മലയാളംहिंदी
அலசல்
'மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு': கதறும் முதல்வர் தொகுதி மக்கள்!
வெறும் 7 நாட்கள் முன்னறிவிப்புடன், கொளத்தூர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதால், மக்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் அவ்வை நகரில், பாலம் கட்டுவதற்காக 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இதனால், 150க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக முன்கூட்டியே வீடுகள் வழங்கப்படாததால், மக்கள் தற்காலிகமாக எங்க செல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.