சர்ச்சையை ஏற்படுத்திய பாதிரியாரின் பேச்சு! என்ன நடந்தது? யார் யார் சிக்கியது?
சர்ச்சைக்குக் காரணமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் கருத்தை, அவர் சார்ந்த கிறிஸ்தவ நிர்வாகமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷா, எம்.எல்.ஏ-கள் உள்ளிட்டோரைத் தரக்குறைவாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த பனங்கரை பகுதியில் அமைந்துள்ள சத்தியசுவிஷேச சபையை ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் மூட வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியச் சிறுபான்மை அமைப்புகள் அருமனை பகுதியில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை அருமனை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் ஒருங்கிணைத்துள்ளார். கூட்டத்தின் நோக்கமாக 60 ஆண்டுகளாக இயங்கி வந்த தற்போது மூடப்பட்டுள்ள ஆலயத்தை மீண்டும் திறக்க வேண்டும், கிறிஸ்தவர்கள் நடத்தும் கூட்டத்தை எந்த அமைப்பினரும் தடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பேசிய ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார், “சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பிரச்சனையைத் தீர்க்க எந்த அமைச்சரும் எம்.எல்.ஏகளும் அருமனை பகுதிக்கு வருவதில்லை. மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோயிலில் தீ பிடித்ததும் அனைவரும் அங்குச் சென்றனர். கிறிஸ்தவ எம்.எல்.ஏகளும் மேல் சட்டை அணியாமல் சுசீந்தரம் தாணுமாலயான் கோயிலுக்குச் செல்கின்றனர். எங்கள் மதத்தில் அனைவரும் ஆடை அணிந்தே வர வேண்டும்.”
குமரிமாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு அறவழி போராட்டம் நடைபெற்றது இதில் தமுமுக மமக சார்பாக, தலைமை பிரதிநிதி காதர் மைதீன், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். pic.twitter.com/9QDTH5JY0R
— TMMK MEDIA (@tmmkhqofficial) July 18, 2021
உள்ளிட்ட கருத்துகளைக் கடுமையான வார்த்தைகளால் முன்வைத்ததுடன், பிரதமர் மோடி, அமித்ஷா கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி மற்றும் தாங்கள் சென்று கேட்டதால் தான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் திமுகவிற்கு வாக்களித்ததாகப் பேசியிருந்தார். அவரது பேச்சுகளில் முழுவதும் கடுமையான வார்த்தைகளே இருந்தன.
அதேபோல் அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டீபன், “காலில் செருப்பு வாங்கி போட முடியாதவன்தான் இன்று எம்.எல்.ஏவாக இருக்கிறான். அவன் கிறிஸ்தவர்களை ஒழிந்துக்கட்டுவதில் மும்முரமாக இருக்கிறான். கடந்த 60 ஆண்டுகளாகச் சத்திய சுவிஷேச சபை இயங்கி வந்தது. தற்போதைய ஐ.ஏ.எஸ் அதிகாரி (துணை மாவட்ட ஆட்சியரைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது) எங்களை அழைத்து ஆலயம் பற்றிப் பேசியிருந்தார். உண்மையில் அவர் ஐ.ஏ.எஸ் படித்திருக்கிறாரா என்று அதிகாரிகள் தான் பரிசோதிக்க வேண்டும். இரண்டு துரோகி கூட்டம் புகார் கொடுத்தால் எங்களை விசாரணைக்கு அழைத்தார். என்னை விசாரணை செய்தபோது, ஆலயம் இருந்ததற்கான ஆதாரம் கேட்டார். அவரிடம் குறிப்பிட்டதும், இந்துக்களுக்கு இதில் புகார் இல்லை என்று தெரிவித்தார். அட பைத்தியம், படித்துத்தான் ஐ.ஏ.எஸ் அதிகாரியானாரா என்று தோன்றியது என்று ஒருமையில் பேசியிருந்தார்.
அருமனையில் மத கலவரத்தை தூண்டிய பாதிரியாரின் கூட்டாளி
— NK Vijin (@KrishnanVijin) July 23, 2021
அருமனை ஸ்டீபனை உடனடியாக கைது செய்!@DrTamilisaiGuv @CTR_Nirmalkumar @annamalai_k
@mohamedathau pic.twitter.com/wnPyl8uGzm
இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “கடந்த 18/07/2021 அன்று அருமனையில் தேசவிரோத, ஹிந்து விரோத கருத்துக்களைக் கூறி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, பிரதமர் குறித்து தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த ஜார்ஜ் பொன்னையா என்கிற கிருஸ்துவ மத போதகரைக் குண்டர் சட்டத்திலும், தேச பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டேக் செய்திருந்தார்.
கடந்த 18/07/2021 அன்று அருமனையில் தேசவிரோத, ஹிந்து விரோத கருத்துக்களை கூறி மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, பிரதமர் குறித்து தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த ஜார்ஜ் பொன்னையா என்கிற கிருஸ்துவ மத போதகரை குண்டர் சட்டத்திலும், தேச பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும். @mkstalin
— Narayanan Thirupathy (@Narayanan3) July 22, 2021
இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “அன்புள்ள நண்பர்களே ஞாயிற்றுக் கிழமை, ஆலயங்கள் பூட்டப்படுவது, செப கூட்டங்கள் தடுக்கப்படுவது, பட்டா நிலத்தில் ஆலயங்கள் கட்டுவதை மறுப்பது மற்றும் சமீபத்தில் மரணமடைந்த ஸ்டான் சாமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்திலே, நான் பேசிய பேச்சு எடிட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அதில், “என் வார்த்தைகள் இந்து சகோதரர்களை புண்படுத்தியதாகவும், நான் என்னுடைய வார்த்தைகளில் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியதாகவும் திரித்து பலர் கூறியுள்ளார்கள்.
வழக்கு பாயப் போகுதுன்னதும்.. மன்னிப்பு கேட்கறான் ராஸ்கல். விடக்கூடாது கைது பண்ணி கம்பி எண்ண வைக்கனும்.. இனி எவனும் இதுமாதிரி பேசக்கூடாது.. pic.twitter.com/nh7PhVhSOE
— Maha Simha (@maha_simha) July 22, 2021
இதன் வழியாக, நானோ, என்னுடன் மேடையில் பேசியவர்களோ மத நம்பிக்கைகளை புண்படுத்திப் பேசவில்லை. ஒருவேளை என்னுடைய மற்றும் பலருடைய பேச்சுகள் இந்து சகோதர சகோதரிகளின் மனங்களை புண்படுத்தினால், அதற்கு அந்த கூட்டத்தின் சார்பாக மன நிறைந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர் காலங்களில், இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
சம்பவம் குறித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் தலை மறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். அவரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடியில் வைத்து போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான ஸ்டீபன், நேற்று இரவு 2 மணியளவில் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த சர்ச்சைக்குக் காரணமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் கருத்தை, அவர் சார்ந்த கிறிஸ்தவ நிர்வாகமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து அருமனை பகுதியில் உள்ள மக்களிடம் இது பற்றிக் கேட்டபோது, வரும் 28-ம் தேதி பாஜகவினர் எந்த வித அனுமதியும் இல்லாமல் கிறிஸ்தவர்களைக் கண்டித்து கூட்டம் நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதில், பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது, என்று தெரிவித்தனர்.
பாஜக சார்பில் கூட்டம் நடத்தப்படுமா என்று உறுதிப்படுத்தவில்லை. அதேபோல் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
