‘வேம்புலி’ கதாபாத்திரத்தை நடிகர் அஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்! - ஜான் கொக்கேன்
என்னை எப்போதும் உற்சாகப்படுத்தியும், என் மீது எனக்கு நம்பிக்கை வரும்படியும் செய்த நடிகர் அஜித் குமாருக்கு நன்றி.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்து ’அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை'. பசுபதி, துஷ்ரா விஜயன், கலையரசன், ஜான் விஜய், ஷபீர் கல்லரக்கல், ஜான் கொக்கேன் ஆகியோர் முக்கிய கதாபாட்க்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தில் வேம்புலி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜான் கொக்கேன். இவருடைய கதாபாத்திரத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரத்தை நடிகர் அஜித் குமாருக்கு அர்ப்பணிப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், “என்னை எப்போதும் உற்சாகப்படுத்தியும், என் மீது எனக்கு நம்பிக்கை வரும்படியும் செய்த நடிகர் அஜித் குமாருக்கு நன்றி. கடினமாக உழைக்கவும், நல்ல மனிதனாக என்னை மாற்றிக்கொள்ளவும், நீங்கள் தான் என்னை உற்சாகப்படுத்தினீர்கள். சார்பட்டா பரம்பரையில் இடம்பெற்றிருக்கும் எனது வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார்” எனப் பதிவிட்டுள்ளார்.
இவர் நடிகர் அஜித்துடன் ’வீரம்’, நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘கே.ஜி.எஃப்’, நடிகர் சிம்புவுடன் ’ஒஸ்தி’ ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Thank you Ajith Sir #thalaajith for always motivating me and encouraging me to believe in myself. You inspire me to work harder each day and to become a better human being. I dedicate this character "Vembuli" to you Sir. Love you Sir.
— Highonkokken (@johnkokken1) July 22, 2021
Please watch #SarpattaOnPrime @PrimeVideoIN pic.twitter.com/43HDDAZgmh
