தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்யும்! - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், “தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும்
ஜூலை 27 முதல் 30 வரை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, கோவை, நீலகிரி, திண்டுக்கல்,தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 50 - 60 கிமீ இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
