சர்வதேச விமான சேவைக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு!
சரக்கு விமானப் போக்குவரத்து சேவைக்கு எந்த தடையும் இல்லை. ’ஏர் பபுள்’ விதிகளின் அடிப்படையில், தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படும்
கடந்த ஆண்டு, நாடு முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வந்ததால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தாண்டு மார்ச் மாதத்தில் கொரோனாவின் 2வது அலை பரவியதைத் தொடர்ந்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘உலக அளவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஆகவே, சர்வதேச பயணிகள் விமானச் சேவை மீது விதிக்கப்பட்டுள்ள தடையை, வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும், சரக்கு விமானப் போக்குவரத்து சேவைக்கு எந்த தடையும் இல்லை. ’ஏர் பபுள்’ விதிகளின் அடிப்படையில், தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படும்’ என, மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
’ஏர் பபுள்’ விதிகளின் அடிப்படையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
#COVID19India - International flights may remain banned till August 31. @DGCAIndia | #COVID19 pic.twitter.com/98c9Gxdhas
— editorji (@editorji) July 30, 2021
