ரீல்ஸ் அம்சத்தின் கால அளவை அதிகரித்த இன்ஸ்டாகிராம்!
தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வசதியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்துள்ளது. ஆகவே, இந்நிலையில், ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவு 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது
உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொழுதுபோக்கு செயலி, இன்ஸ்டாகிராம். இதில், பயனர்கள், 24 மணி நேரம் மட்டும் தெரியும் வகையில், 30 நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிடும் ரீல்ஸ் என்ற வசதி உள்ளது. இது ஃபேஸ்புக்கில் பயன்பாட்டில் இருக்கும் ஸ்டோரி என்ற வசதிக்கு நிகரானது.
தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வசதியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்துள்ளது. ஆகவே, இந்நிலையில், ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவு 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இத்துடன், ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும் கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சமும் இன்ஸ்டாவில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சமானது, பரவலாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் வெகு சில நாடுகளில் மட்டுமே இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில் இந்த அம்சத்தைப் பயனர்கள் பயன்படுத்தலாம். இத்தகவலானது இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reels. up to 60 secs. starting today. pic.twitter.com/pKWIqtoXU2
— Instagram (@instagram) July 27, 2021
