வெண்கல பதக்கத்தை தவறவிட்டது இந்திய பெண்கள் ஹாக்கி அணி!
இந்தியா வீராங்கனை குர்ஜித் கவுர் 25 மற்றும் 26-து நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பின்னர் 29வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா ஒரு கோல் அடிக்க இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டம் இன்று நடைபெற்றது.அதில், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் கால் பகுதியில், இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது கால் பகுதியின் 16வது நிமிடத்தில், இங்கிலாந்து 16 மற்றும் 24வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தது. இந்தியா வீராங்கனை குர்ஜித் கவுர் 25 மற்றும் 26-து நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பின்னர் 29வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா ஒரு கோல் அடிக்க இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது.
#IND 3 - 4 #GBR
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 6, 2021
Heartbreak for the Indian women's #hockey team ????
They gave it their all and delivered a brilliant performance but it wasn't meant to be. #Tokyo2020
3வது கால் பகுதியில், 35வது நிமிடம், இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடிக்க, இதனால் ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது. 4வது கால் பகுதி ஆட்டத்தின், 48வது நிமிடத்தில், இங்கிலாந்துக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்தி ஒரு கோல் அடித்தனர். இதனால் இங்கிலாந்து 4-3 என முன்னிலைப் பெற்றது.
அதன்பிறகு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோற்று, வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது.
இந்த விடியோவை தவறவிடாதீர்கள்!!!