முதல் டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இந்திய அணி தரப்பில், 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிகெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகள் இடையிலான டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் தவான் களமிறங்கினர். பிரித்வி ஷா ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் தவான் 46 ரன்களில் ஆட்டமிலந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி, 34 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது.
பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், சரீத் அஷ்லெங்கா, அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில், 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நாளை (ஜூலை 27) நடைபெறுகிறது.
#TeamIndia win the 1st #SLvIND T20I by 38 runs ????
— BCCI (@BCCI) July 25, 2021
We go 1-0 in the series ???? pic.twitter.com/9FfFbx2TTZ
