தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை முந்தியது இந்தியா - மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்
ஜூன் 28 காலை 8 மணி வரை இந்தியாவில் 32,36,63,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கோவிட்-19 குறித்த உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் 29 ஆவது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் தற்போது பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5,72,994 ஆக குறைந்துள்ளது.
கரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் சதவிகிதம் படிப்படியாக அதிகரித்து இன்று 96.80% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 58,578 பேர் குண்மடைந்துள்ளனர்.
கோவிட் 19 தடுப்பூசியில் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை நிர்வகிக்கப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் அமெரிக்காவை முந்தியுள்ளோம். அமெரிக்கா டிசம்பர் 14, 2020 முதல் தடுப்பூசி போடத் தொடங்கியது, அதேசமயம் ஜனவரி 16, 2021 ஆம் தேதி இந்தியாவில் தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது. கோவிட் தடுப்பூசியின் புதிய கொள்கையின் கீழ், 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இன்று காலை 8 மணி வரை 32,36,63,297 தடுப்பூசி மருந்துகளை நம் நாட்டு மக்களுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கியுள்ளோம். இவர்களில் 1,01,98,257 ஹெல்த்கேர் தொழிலாளர்கள் (1 ஆவது டோஸ்) மற்றும் 72,07,617 ஹெல்த்கேர் தொழிலாளர்கள் (2 ஆவது டோஸ்), 1,74,42,767 முன்களப் பணியாளர்கள் (1 ஆவது டோஸ்), 93,99,319 முன்களப் பணியாளர்கள் (2 ஆவது டோஸ்), 18-44 வயதுக்குள்ளானவர்கள் 8,46,51,696 பேர் (1 ஆவது டோஸ்) மற்றும் 19,01,190 பேர் (2 ஆவது டோஸ்), 45 வயது முதல் 60 வயது வரை உள்ளனவர் 8,71,11,445 (1 ஆவது டோஸ்), மற்றும் 1,48,12,349 (2 ஆவது டோஸ்), 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6,75,29,713 (1 ஆவது டோஸ்) மற்றும் 2,34,08,944 (2 ஆவது டோஸ்) தடுப்பூசு போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
