217 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் - ஒருத்தர் கூட 50 ரன்கள் அடிக்கவில்லை
நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 அடித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை அடித்தனர். ரோஹித் சர்மா 34 ரன்னிலும், சுப்மன் கில் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
பின்னர் நிதாமனாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 அடித்தார்.
கடைசி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
இந்திய அணி 92.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் மட்டுமே அடித்தது.
ALL OUT ☝️
— ICC (@ICC) June 20, 2021
India's innings ends at 217, after a quality bowling display from the @BLACKCAPS.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Ia4tmbuPBD pic.twitter.com/v8MvWCon9z
நியூசிலாந்து அணியின் கெயில் ஜேமிசன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
