கேராளாவில் வாலிபரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி 18 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்!
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தனர்.இதில் சூரஜின் நுரையீரல் பகுதியில் ஒரு சிறிய பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபரேசன் செய்து அதை அகற்ற முடிவு செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ் (வயது 32). இவர், பல ஆண்டுகளாக முச்சு திணறல் மட்டும் இருமலால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.
இந்நிலையில் கொச்சி அருகேயுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தனர்.இதில் சூரஜின் நுரையீரல் பகுதியில் ஒரு சிறிய பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபரேசன் செய்து அதை அகற்ற முடிவு செய்தனர்.

பின்னர், நுரையீரல் சிறப்பு பிரிவு மருத்துவர்கள் மற்றும் இதயநோய் நிபுணர்கள் அவருக்கு ஆபரேசன் செய்தனர். அப்போது சூரஜின் நுரையீரலில் ஒரு பேனா மூடி இருந்ததை கண்டுபிடித்தனர்.
சூரஜ் சிறு வயதில் ஒருமுறை பேனா மூடியை விலுங்கிவிட்டார். அப்போது, அவரை மருத்துவமனைக்கு அளைத்து சென்றபோது, மருத்துவர்கள் ஒரு பிரச்னையும் இல்லை எனக்கூறிவிட்டனர். இந்நிலையில், அந்த பேனா மூடி சுவாசக்குலாய் வளியாக அவரது நுரையீரலுக்குள் சென்றது 18 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
