"தடுப்பூசி போட்டுக் கொண்டால் 100 டாலர்" - நியூயார்க் மேயர்
நியூயார்க்கில், ஜூலை 30 முதல் செப்டம்பர் 2-வது வாரத்திற்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவதற்காகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாகப் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவின் புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா வகை வைரஸே, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்களை ஊக்கப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 'நியூயார்க்கில், ஜூலை 30 முதல் செப்டம்பர் 2-வது வாரத்திற்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும். வரும் செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு வாரம்தோறும் பரிசோதனை செய்யப்படும். நியூயார்க்கில் இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும், 71 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்" என நியூயார்க் மேயர் டெ பிளாசியோ தெரிவித்துள்ளார்.

Related Stories
அமெரிக்காவில் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் மக்கள்! கதறி அழும் குடும்பத்தினர்! என்ன நடக்கிறது அங்கே?
நியூயார்க்கில் இரண்டு லாரிகள் நிறைய அழுகிய சடலங்கள்! அழகிய நகரம் ‘நரகமான’ துயரம்!
வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஏற்றப்படும் இந்திய தேசியக் கொடி!
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கட்டாயம் இல்லை - ஜோ பைடன்