ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: 9 பேர் பலி
ப்போது, மலையடிவாரத்தில் சுற்றுலாப் பயணிகள், சிலர் கார்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார்கள் மீது பாறைகள் விழுந்தன. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னோர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சங்லா பள்ளத்தாக்கு. இங்கு, கடந்த சில தினங்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பலத்த மழை காரணமாக மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்றும் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், நேற்று மதியம் அங்குள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த நூற்றுக்கணக்கான பெரிய பாறைகள் சரிந்து விழுந்தன. அப்போது, மலையடிவாரத்தில் சுற்றுலாப் பயணிகள், சிலர் கார்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார்கள் மீது பாறைகள் விழுந்தன. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பாறைகள் விழுந்ததில் அப்பகுதியிலிருந்த ஆற்றுப்பாலம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Himachal Pradesh: Boulders roll downhill due to landslide in Kinnaur district resulting in bridge collapse; vehicles damaged pic.twitter.com/AfBvRgSxn0
— ANI (@ANI) July 25, 2021
