இந்தியாவில் உயர்ந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை..!
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில், 29 ஆயிரத்து 179 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.. ஆனால், இந்த கொரோனா பெருந்தொற்று காலம் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், ”2017 -2018ம் நிதி ஆண்டு காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 635 ஆக இருந்தது., 2019 -2020ம் ஆண்டு காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது. இது, கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பரவிய காலகட்டமான 2020- 2021ம் ஆண்டு காலகட்டத்தில் 58 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில், 29 ஆயிரத்து 179 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தமிழகத்தில் உள்ள குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 -2020ம் ஆண்டு காலகட்டத்தில், 3 ஆயிரத்து 928 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளார். இந்த எண்ணிக்கை 2020-2021ம் ஆண்டு காலகட்டத்தில், ஆயிரத்து 456 ஆகக் குறைந்துள்ளது.
இந்த விடியோவை தவறவிடாதீர்கள்!!!