உயரம் தாண்டுதல் போட்டி; தங்க பதக்கத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள்!
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது. களத்திலும் சரி வெளியிலும் சரி இருவரும் சிறந்த நண்பர்களாக இருப்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், உலகையே திரும்பி பார்க்க வைக்கும் சுவாரஸ்யமான நிகல்வு ஒன்று நடந்துள்ளது. உயரம் தாண்டுதல் போட்டியில், கத்தார் நாட்டு வீரர் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி, பெலாரஸ் வீரர் மாக்சிம் நெடாசேகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், கத்தார் நாட்டு வீரர் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி ஆகிய இருவரும் 2.37 மீட்டர் உயரம் தாண்டினர். பின்னர் 2.39 மீட்டர் உயரம் தாண்டுவதற்கு இருவரும் 3 முயற்சிகள் செய்தனர். அதில் இருவருமே 3 தவறுகளை செய்தனர். அதன்பின் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு தாண்டுதல் முயற்சியை நடத்த நடுவர் முடிவெடுத்தார்.
அப்போது நடுவரிடம் சென்ற பார்ஷிம், “இரு தங்கப்தக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா, இருவரும் தங்கத்தை ஷேர் செய்ய முடியுமா" எனக் கேட்டார். இதற்கு நடுவரும் தங்கத்தைப் பகிர்ந்து அளிக்க சம்மதம் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் பார்ஷிம், கியான்மார்கோ இருவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு நட்புடன் துள்ளி குதிக்கும் வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

பார்ஷிம் கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்றிருந்தார்.கடந்த 2010ம் ஆண்டு ’உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டி கனடாவில் நடைபெற்றது. அப்போதில் இருந்து பார்ஷிம், தாம்பேரி இருவரும் சிறந்த நண்பர்களாக ஆகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது. களத்திலும் சரி வெளியிலும் சரி இருவரும் சிறந்த நண்பர்களாக இருப்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
How amazing is this!? ????❤
— BBC Sport (@BBCSport) August 1, 2021
Gianmarco Tamberi and Mutaz Essa Barshim BOTH take gold! ????https://t.co/qHK4OxWeNR #tokyo2020 #bbcolympics pic.twitter.com/9Rl47SN0lC
