‘வரும் 7ம் தேதி முதல் கனமழை பெய்யும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்
வரும் 7ம் தேதி முதல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள (திருப்பூர், தென்காசி) பகுதிகளில் மிதமான மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை, நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்யும்.
வரும் 7ம் தேதி முதல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள (திருப்பூர், தென்காசி) பகுதிகளில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் வரும் 8ம் தேதி வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். ஆகவே, அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
