மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் நிலச்சரிவு: 44 பேர் பலி
இன்று காலை ரெய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். அதே போல சதாரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேரைக் காணவில்லை.
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இன்று காலை ரெய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். அதே போல சதாரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேரைக் காணவில்லை.


இதையடுத்து, மலைவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு பேரிடர் மீட்புக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
