தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
கார் பரிசளிக்கும் ஹெச்.சி.எல் நிறுவனம்! என்ன கார்?
இந்த திட்டம் செயல்படுத்துவது முதல் முறையல்ல. 2013-ம் ஆண்டு 50 பணியாளர்களுக்கு கார் பரிசாக வழங்கிய ஹச்.சி.எல் நிறுவனம், அதன்பின் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் மிக சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாகத் தர திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்துவது முதல் முறையல்ல. 2013-ம் ஆண்டு 50 பணியாளர்களுக்கு கார் பரிசாக வழங்கிய ஹச்.சி.எல் நிறுவனம், அதன்பின் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மீண்டும் அந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
திறன்மிகுந்த ஊழியர்களைத் தங்க வைக்கவே அந்த நிறுவனம் இத்தகைய பரிசை அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
