அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மாணவர்கள்!
கடந்த 2019-2020ம் கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2020-2021ம் கல்வி ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட அரசு துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கால், பெற்றோர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டும், இதே சூழல் நீடித்த நிலையில் பல மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் படித்து வந்தனர். இந்நிலையில், தற்போது பல மாவட்டங்களில் தனியார்ப் பள்ளியிலிருந்து மாணவர்கள் பலர், அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக மெட்ரிக்குலேசன் பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் மற்றும் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. தனியார்ப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு முழு கட்டணம் வசூலிப்பது போன்ற பல இக்கட்டான சூழலைச் சமாளிக்க முடியாமல் பெற்றோர் இதுபோன்ற முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 2019-2020ம் கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2020-2021ம் கல்வி ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட அரசு துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால், தனியார்ப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகின்றனர். பெற்றோர் மத்தியில் அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கையால், 8 வகுப்புவரை சேர மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. தனியார்ப் பள்ளிகளில் 8 வகுப்பு முடிந்து 9ஆம் வகுப்பு சேர மாற்றுச் சான்றிதழ் கோரும் பெற்றோரிடம், பெரும் தொகையைக் கேட்டு நச்சரிக்கிறார்கள். இந்த பெரும் தொற்று காலத்தில் பெற்றோரின் அபயக்குரல் வருத்தமளிக்கிறது. எனவே அத்தகைய பள்ளியிலிருந்து EMI எண்ணை வழங்காவிட்டாலும், ஆதார் மூலம் அதைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தொடரும் குழப்பம்! ஆந்திராவில் பள்ளிகள் திறந்த 3 நாட்களில் பாதிக்கப்பட்ட மாணவர்கள்!
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் தெரிவித்த கருத்து என்ன? திட்டமிட்டபடி திறக்கப்படுமா?