அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்கள் மூலம், விண்ணப்பிக்கலாம்.
’அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புவோர் இன்று(ஜூலை 26) முதல் விண்ணப்பிக்கலாம்’ என, கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ”தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்கள் மூலம், விண்ணப்பிக்கலாம்.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும். இக்கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணையவலி வங்கி பரிவர்த்தனை எனப்படும் நெட் பேங்கிங் மூலமாகச் செலுத்தலாம்.
அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் நேரடியாகவோ வரைவு காசோலையாகவோ செலுத்தலாம். மாணவர்கள், சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பப் பதிவு ஜூலை26 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044 - 2826 0098, 2827 1911 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
