இந்தியாவில் 42.34 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன! - சுகாதாரத்துறை
இதுவரை மொத்தம் 42 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரத்து 30 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்புகள் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. மேலும், இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் 3ம் அலை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ளத் தடுப்பூசி முக்கியமான தேவையாக இருப்பதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 35,342 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 42 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரத்து 30 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன” என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 18 முதல் 44 வயது வரையிலானவர்களில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 13 கோடியே 33 லட்சத்து 04 ஆயிரத்து 56 பேர், அவர்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 55 லட்சத்து 55 ஆயிரத்து 468 பேர் ஆவர். 45 முதல் 59 வயது வரையிலானவர்களில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 9 கோடியே 95 லட்சத்து 79 ஆயிரத்து 752 பேர், அவர்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 3 கோடியே 25 லட்சத்து 92 ஆயிரத்து 396 பேர் ஆவர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 7 கோடியே 29 லட்சத்து 46 ஆயிரத்து 445 பேர், அவர்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 3 கோடியே 30 லட்சத்து 32 ஆயிரத்து 658 பேர் ஆவர்.
சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்களில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 1 கோடியே 02 லட்சத்து 80 ஆயிரத்து 416 பேர், அவர்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 76 லட்சத்து 51 ஆயிரத்து 103 பேர் ஆவர்.முன்களப் பணியாளர்களில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 1 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரத்து 482 பேர், அவர்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 1 கோடியே 06 லட்சத்து 40 ஆயிரத்து 254 பேர் ஆவர்.
