‘அக்னி பி’ ஏவுகணை சோதனை - வெற்றிகரமாக நடத்திய டிஆர்டிஓ
அக்னி பி பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.
ஒடிசா கடற்கரையில் ‘அக்னி பி’ என அழைக்கப்படும் அக்னி தொடரின் புதிய ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசா கடற்கரையில் காலை 10:55 மணிக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து புதிய தலைமுறை அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது.
“கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பல்வேறு ரேடார் நிலையங்கள் ஏவுகணையை கண்காணித்தன. ஏவுகணை சரியான பாதையில், அனைத்து பணி நோக்கங்களையும் உயர்மட்ட துல்லியத்துடன் பூர்த்தி செய்தது” என்று டிஆர்டிஓ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை அக்னி 3 ஐ விட 50% எடையில் குறைவானது மற்றும் புதிய வழிகாட்டுதலையும் புதிய தலைமுறை உந்துவிசையையும் கொண்டுள்ளது. இந்த ஏவுகணையை ரயில் மற்றும் சாலையில் இருந்து ஏவமுடியும் மற்றும் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கவும் முடியும். மேலும் தேவைகளுக்கு ஏற்ப நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியும்.
1000 கி.மீ முதல் 2000 கி.மீ வரை சென்று அழிக்கக்கூடிய திறன் கொண்டது இந்த ஏவுகணை.
DRDO successfully flight tests New Generation Agni P Ballistic Missile https://t.co/vEPsqyfUpG pic.twitter.com/XoYPGiwEpR
— DRDO (@DRDO_India) June 28, 2021
