சென்னை, தேனி, திருநெல்வேலி, சேலம், திருவாரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் இருந்த நிலையில் தற்போது 8 வதாக மதுரையில் ஓர் ஆய்வு மையம் அமைந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்து என்ற தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மதுரையை சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். ஏற்கெனவே நீரிழிவு, நுரையீரல் பிரச்சினை இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது . இதனால் மதுரை மற்றும் அருகே உள்ள மாவட்ட பகுதி மக்களுக்கு கரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்ளமுடியும். இந்த பரிசோதனை மையம் தமிழகத்தில் 8-வது கரோனா பரிசோதனை மையமாகும். ஏற்கெனவே சென்னை(கிங்ஸ் பரிசோதனை மையம்), தேனி, திருநெல்வேலி, சேலம், திருவாரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் இருந்த நிலையில் தற்போது 8 வதாக மதுரையில் ஓர் ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
