தமிழ்മലയാളംहिंदी
உடல்நலம்
அடுத்த மாதம் கொரோனா தொற்றி்ன் 3வது அலை! எச்சரிக்கும் மருத்துவர்கள்
விரைவில் கொரோனா தொற்றின் 3வது அலை துவங்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 3வது அலை அடுத்த மாதம் பரவ வாய்ப்புள்ளது என இந்திய மருத்துவ சங்கத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது குறையத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 34ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பு, நாள் ஒன்றுக்கு லட்சக் கணக்கில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உயிரிழப்புகளும் நாள் ஒன்றுக்கு மிகவும் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அடுத்த மாதம் பரவ துவங்கும் என்று இந்திய மருத்துவ சங்கத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
