ஒருகோடி சப்ஸ்கிரைபர்ஸ் பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனல்!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் 2018-ம் ஆண்டு முதலில் சமையல் வீடியோவை பதிவேற்றி வருகின்றனர்.
கிராமத்து முறையில் சமைத்து அசத்தும், இளைஞர்கள் முதல் முதியவர் வரை இணைந்து செயல்பட்டுவரும் வில்லேஜ் குக்கிங் சேனல். இந்த சேனலில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியும் ஒருமுறை கலந்துகொண்டார். அதன்மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேனல் பற்றிப் பேசப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் 2018-ம் ஆண்டு முதலில் சமையல் வீடியோவை பதிவேற்றி வருகின்றனர்.

கிராமத்து முறையில் சமைத்து உண்பது, அதேபோல் ஆசிரமங்களுக்குச் சென்று சமைத்த உணவை வழங்குவது என்று, சேனலில் வெளியிடும் வீடியோவில் எந்த ஆடம்பரமும் இருக்காது. புல்வெளி பரப்பில், அடுப்பு அமைத்து, அம்மியில் அரைத்து மட்டுமே சமைக்கின்றனர்.
இவ்வளவு பெருமை மிக்க சேனல், தற்போது 1 கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 1 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் பெற்ற முதல் சேனல் இதுதான்.
அதேபோல் தங்களின் யூடியூப் மூலம் ஈட்டிய 10 லட்சம் ரூபாயை, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
