விஜயகாந்தை நேரில் சந்திக்கச் சென்ற மு.க.ஸ்டாலின்!
தேமுதிக துணைப் பொதுச்செயலர் சுதீஷ் முதலமைச்சரை வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினுடன் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைச் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டில் அவரை சந்திக்க நேரில் சென்றார். சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தேமுதிக துணைப் பொதுச்செயலர் சுதீஷ் முதலமைச்சரை வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினுடன் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மு.க.ஸ்டாலின் பலமுறை விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலன் குறித்துக் கேட்டறிந்திருந்தார். இந்நிலையில் தான் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
நீண்ட காலமாக உடல் நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். அவருக்குப் பதிலாக அவரது உறவினரான சுதீஷ் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
