கொரோனாவை தடுக்க பேருந்துகளில் ரசாயானப் பூச்சு - மகாராஷ்டிர போக்குவரத்து துறை
மார் 10 ஆயிரம் பேருந்துகளுக்கு, இந்த ரசாயனப் பூச்சு பூசப்படும். இதற்கு ஒரு பேருந்துக்கு 9 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும்.
இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ’கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா அரசுப் பேருந்துகளில் ரசாயனம் பூசப்பட உள்ளது. பேருந்துகளின் உட்பகுதியிலும் வெளியிலும் பூசப்படும் ரசாயனத்தால் அவற்றின் மீது படியும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்றுக் கிருமிகள் அழிந்து விடும். ஆன்டி மைக்ரோபையல் (ANTI MICROBIAL) எனப்படும் பூச்சுக்களைப் பூசுவதை விமான நிறுவனங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருகின்றன.
சுமார் 10 ஆயிரம் பேருந்துகளுக்கு, இந்த ரசாயனப் பூச்சு பூசப்படும். இதற்கு ஒரு பேருந்துக்கு 9 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். கொரோனா அச்சத்தால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ரசாயனப் பூச்சு பூசிய பின்னர் இந்நிலை மாறும் என எதிர்பார்க்கிறோம்’ என மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
