தமிழ்நாடு பாடநூல்களில் இருந்து சாதிப்பெயர்கள் நீக்கம்!
தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர், பெயரில் உள்ள, ஐயர் நீக்கப்பட்டு, உ.வே.சாமிநாதர் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரது பெயரில் உள்ள பிள்ளை நீக்கப்பட்டு, மீனாட்சி சுந்தரம் என்றும், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்பதில் உள்ள பிள்ளை நீக்கப்பட்டு வ.உ.சிதம்பரனார் எனவும் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களைத் தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இதற்கிடையில், பாடநூல் கழகத் தலைவராக ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டார்.மேலும், பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற சொல் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களின் பின்னால் உள்ள, சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர், பெயரில் உள்ள, ஐயர் நீக்கப்பட்டு, உ.வே.சாமிநாதர் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரது பெயரில் உள்ள பிள்ளை நீக்கப்பட்டு, மீனாட்சி சுந்தரம் என்றும், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்பதில் உள்ள பிள்ளை நீக்கப்பட்டு வ.உ.சிதம்பரனார் எனவும் மாற்றப்பட்டுள்ளது. முத்துலெட்சுமி ரெட்டி என்பதில் உள்ள ரெட்டி நீக்கப்பட்டு முத்துலெட்சுமி என்று அச்சிடப்பட்டுள்ளது.

சிறுவயதிலேயே மாணவர்களுக்குச் சாதி ரீதியிலான தகவல்கள் சென்று சேரக்கூடாது என இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 1997ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள்,மாவட்டங்களுக்கு இருந்த தலைவர்களின் சாதிப் பெயர்களை நீக்கியும், அதேபோல போக்குவரத்துத் துறையிலிருந்த சாதிப் பெயர்களை நீக்கம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
