இந்தியர்கள் இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க முடியுமா?
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, இப்போது EMA -European Medicines Agency-யிடம் கோவிஷீல்ட் ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளார். ஒப்புதல் ஒரு மாதத்தில் வரும் என்று பூனவல்லா எதிர்பார்க்கிறார்.
இந்தியர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை என்றாலும், பல ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட்டை ‘கிரீன் பாஸ்’க்கு ஒப்புதல் அளிக்க முயற்சி எடுத்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் கிரீன் பாஸ் என்று அழைக்கப்படும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழை வெளியிடுகிறது. ஃபைசர், மாடர்னா, வாக்ஸ்ஜெர்வியா மற்றும் ஜான்சன் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பாஸ் கிடைக்கும், அவர்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை எடுத்த இந்தியர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதை பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளை இந்தியா புதன்கிழமை கேட்டுக்கொண்டது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழில் சேர்க்கப்பட்டதும், இந்தியாவின் கோ-வின் தடுப்பூசி சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டதும், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழை ஏற்றுக் கொள்ளும், மேலும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதே தடுப்பூசியின் (ஆஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டின் வாக்ஸ்ஜெர்வியா தடுப்பூசி) மற்றொரு பதிப்பாக கோவிஷீல்ட் இருப்பதால், கோவிஷீல்ட் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிக்கான சரியான ஆதாரமாக ஜெர்மனி ஏற்கனவே கருதுகிறது என்று ஜெர்மனி தூதரக செய்தித் தொடர்பாளர் வால்டர் ஜே லிண்ட்னர் தெளிவுபடுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடு அல்லாத சுவிட்சர்லாந்து, ஜூன் 26 முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மூன்றாம் நாடு பிரஜைகளை (CHE, EU மற்றும் WHO) ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. புது தில்லியில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் தற்போது மூன்றாம் நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கான அனைத்து விசா வகைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
1) இந்தியர்கள் இப்போது ஐரோப்பா செல்ல முடியுமா?
கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களை சுவிட்சர்லாந்து அனுமதிக்கிறது. இது நாடு சார்ந்த வழிகாட்டுதல்களைப் பொறுத்தது. ஆனால் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் இருந்து கட்டுப்பாடுகளை நீக்கவில்லை. மேலும் கட்டுப்பாடு சில காலம் அங்கேயே இருக்கலாம்.
2) கோவிஷீல்ட் ஐரோப்பாவில் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை?
கோவிஷீல்ட் ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்வது தவறானது. பல ஐரோப்பிய நாடுகளில், கோவிஷீல்ட் கோவிட் -19 க்கு எதிரான சரியான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் உற்பத்தியாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திற்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்காததால் ஐரோப்பிய ஒன்றியம் தனது கிரீன் பாஸில் சேர்க்கவில்லை. கிரீன் பாஸ் என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடைய பயணம் செய்வதே தவிர வெளியில் இருந்து அல்ல என்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்தியது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கோவிஷீல்ட்டை தனித்தனியாக அங்கீகரிக்கும் ஏற்பாட்டைக் கொண்டுள்ளன, ஏனெனில் இது WHO-அங்கீகாரம் பெற்றது.
3) கோவிஷீல்ட் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரீன் பாஸில் சேர்க்கப்படுமா?
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, இப்போது EMA -European Medicines Agency ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளார் . ஒப்புதல் ஒரு மாதத்தில் வரும் என்று பூனவல்லா எதிர்பார்க்கிறார்.
