தமிழ்മലയാളംहिंदी
பொழுதுபோக்கு
பாலிவுட்டில் அறிமுகமாகும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' நடிகை!
இயல்பான நடிப்பு, ஆடம்பரம் இல்லாத மேக்கப் என்று, கதையின் தரத்திற்கு ஏற்ப நடித்துப் புகழ்பெற்றவர் மலையாள நடிகை நிமிஷா
பாலிவுட்டில் அறிமுகமாகும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' நடிகை!
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற நடிகை, நிமிஷா சஜயன் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
இயல்பான நடிப்பு, ஆடம்பரம் இல்லாத மேக்கப் என்று, கதையின் தரத்திற்கு ஏற்ப நடித்துப் புகழ்பெற்றவர் மலையாள நடிகை நிமிஷா சஜயன். இவர், தொன்டிமுடிதலும் ட்ரிஷாக்ஷியும் என்ற படத்தில் அறிமுகமாகினார். இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தினால், தமிழகத்திலும் பெருமளவில் கவனம்பெற்றார்.
தற்போது இவர் பகத்பாசிலுடன் மாலிக் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தவாரம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
