ஏ.ஆர்.ரகுமான் வாய்ஸ்ல வெறித்தனம் பாடல் கேட்டிருக்கீங்களா? - வீடியோ இதோ!
விஜய் பாடிய வெறித்தனம் பாடலை யூடியூபில் தற்போது வரை 6 கோடியே 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
பிகில் படத்தில் இருந்து வெறித்தனம் பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரு வெற்றி பெற்ற படம் பிகில். இந்தப் படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து 2019 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது.
படம் மட்டுமல்லாமல் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெறித்தனம், உனக்காக வாழ நினைக்கிறேன், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
முதன் முதலில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். யூடியூப்பில் தற்போது வரை இந்தப் பாடலை 6 கோடியே 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
தற்போது இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு நிகழ்ச்சியில் பாடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
#Verithanam in @arrahman Voice.. Sema cute ah iruku???? #ARR pic.twitter.com/1mtllL5Gin
— Mithun K Raman (@mithunraman) February 16, 2020
