கொரோனா பாதிப்பு: வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டி நிறுத்தம்!
வெஸ்ட் இண்டீஸ் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போட்டியானது உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையில் முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. தற்போது, இரு அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த நிலையில், நேற்று (22-07-2021) 2வது ஒருநாள் போட்டி நடைபெற இருந்தது. டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போட்டியானது உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து இரு அணி வீரர்களும் உடனடியாக ஹோட்டல் அறைக்கு அனுப்பப்பட்டனர். வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. கொரோனா முடிவுகள் வெளியான பிறகே 2வது ஒருநாள் போட்டி எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The second CG Insurance ODI between West Indies and Australia has been postponed due to a positive COVID-19 test result. #WIvAUS
— Windies Cricket (@windiescricket) July 22, 2021
Details⬇️https://t.co/zKnpCVMy4Z

Related Stories
15 ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித்... சாதனை படைக்க ஒரு சிக்ஸருக்காக காத்திருப்பு
INDvWI 2nd ODI - இந்திய அணி பேட்டிங்... அணியில் முக்கிய மாற்றங்கள்
முதலிடத்தில் ரோஹித் சர்மா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 388 ரன்கள் இலக்கு!
ரோஹித், ராகுல் சதம்... ஹாட்ரிக் விக்கெட் எடுத்த குல்தீப் யாதவ்.... தோல்விக்கு பழிதீர்த்த இந்தியா