’சார்பட்டா பரம்பரை’ படத்தை பாராட்டிய நடிகர் சூர்யா!
”சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலைத் திரை அனுபவமாக மாற்ற இயக்குநரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது. வாழ்த்துகள்
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த படம் ’சார்பட்டா பரம்பரை’. இப்படம்அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பசுபதி, துஷாரா விஜயன், ஜான் கொக்கேன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா, ”சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலைத் திரை அனுபவமாக மாற்ற இயக்குநரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது. வாழ்த்துகள்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சூர்யாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள பா.இரஞ்சித், ‘நன்றி சார்’ எனப் பதிவிட்டுள்ளார்.
நன்றி சார் ???????????? https://t.co/I6Ze5fM2jO
— pa.ranjith (@beemji) July 29, 2021
