புவனேஷ்வரில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை!
புவனேஷ்வரில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் நகரமானது புவனேஷ்வர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்துவதே முதன்மையான தீர்வாகக் கருதப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் நகரமானது புவனேஷ்வர்.
இது தொடர்பாகத் தெரிவித்த புவனேஷ்வர் மாநகராட்சி உதவி ஆணையர் அன்ஷுமன் ராத், “நாங்கள் நகரத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த விரும்பினோம். நகரத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 31 ஆயிரம் பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள், 33 ஆயிரம் பேர் முன்கள பணியாளர்கள், 18 முதல் 45 வயதுடையோர் 5.17லட்சம் பேர், 3.25 லட்சம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த தடுப்பூசிகள் ஜூலை 31க்குள் போடப்பட்டுள்ளன.
மொத்தம் 18 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 100 சதவீதம் என்ற இலக்கை எட்ட நகரம் முழுதும் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மட்டும் 30 மையங்கள் இயக்கப்பட்டன. அதே போல் நடமாடும் தடுப்பூசி மையங்களும் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன. இது தவிரப் பள்ளிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக நோய் தடுப்பாற்றல் மையங்கள் 15 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.வேலை செய்ய புவனேஷ்வருக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
#Bhubaneshwar becomes first city in India to vaccinate 100% of its population against #COVID19 #Odisha pic.twitter.com/NAVtvvAFuo
— editorji (@editorji) August 2, 2021
