வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் வன்னியர், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு, இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, வன்னியருக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு முதல், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைமுறைப்படுத்தப்படும். என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! pic.twitter.com/NhAN2mEEvF
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 26, 2021
